ரயில் பயணிகளிடம் நகை பறித்தவர் கைது :

By செய்திப்பிரிவு

ஜோலார்பேட்டை: கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் மதன்குமார்(37). இவரது மனைவி சிந்துஜா(32). இவர், கடந்த 6-ம் தேதி சென்னையில் இருந்து கர்நாடகா செல்லும் காவேரி விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டியில் ஜன்னல் ஓரத்தில் பயணம் செய்தார். அந்த ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து ரயில் புறப்பட்டு சென்ற சிறிது தூரத்தில் சிந்துஜாவிடம் இருந்து ஐந்தரை பவுன் எடையுள்ள தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு மர்ம நபர் ஒருவர் கீழே குதித்து தப்பியோடினார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் சிந்துஜா புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ரயில்வே நடைமேடையில் அமைக்கப்பட்டி ருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், 6-ம் தேதி சிந்துஜாவிடம் தங்கச்சங்கிலி பறித்துக்கொண்டு மர்ம நபர் ஒருவர் ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பிச்செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இந்த காட்சியை கொண்டு ரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது கேரளா மாநிலம், ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த அனீஷ்பாபு(30) என்பவர் தான் ரயில் பயணிகளிடம் இருந்து தங்கச்சங்கிலி, செல்போன் மற்றும் பணத்தை பறித்துச்செல்வது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, கேரளா சென்ற ரயில்வே காவல் துறையினர் அங்கு சுற்றித்திரிந்த அனீஷ்பாபுவை கைது செய்து, அவரிடம் இருந்து 12 பவுன் தங்க நகைகள், ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள 6 செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

9 mins ago

தமிழகம்

46 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஓடிடி களம்

12 hours ago

மேலும்