கள்ள நோட்டுகளை மாற்ற முயற்சி வங்கி மேலாளர் போலீஸில் புகார் :

By செய்திப்பிரிவு

கோவை:கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்படும் தனியார்வங்கிக் கிளையின் மேலாளராக பணி செய்து வருபவர் கிரிஜா (40). இவர் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை புகார் அளித்தார்.அந்த புகாரில், கோவை சொக்கம்புதூர் பிருந்தா லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் சவுண்டப்பன். இவர் எங்களது வங்கிக் கிளையில் கடந்த 14-ம் தேதி பிற்பகல் ரூ.24,900 பணத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் இயந்திரம் மூலமாக செலுத்த முயன்றார். அவர் செலுத்த முயன்ற ரூபாய் நோட்டுகளில் 13 ஐநூறு ரூபாய் நோட்டுகளை இயந்திரம் ஏற்கவில்லை. இதை கவனித்த வங்கி கணக்காளர் அந்த ரூபாய் நோட்டுகளை வாங்கிப் பார்த்தபோது, அவை போலியாக அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகள் என்பது தெரிய வந்தது. இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, சவுண்டப்பன் மீது ஆர்.எஸ்.புரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தொடர்புடைய கள்ள நோட்டுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, 'கள்ள ரூபாய் நோட்டுகளில் வரிசை எண்கள் ஒரே மாதிரியாக அசல் ரூபாய் நோட்டுக்களை போல் அச்சிடப்பட்டுள்ளன. சவுண்டப்பன் பீளமேட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அங்கிருந்து தான் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்த எடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் தொடர் விசாரணை நடத்தி வருகிறோம், 'என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

8 mins ago

இந்தியா

22 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

30 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

15 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

மேலும்