ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் - புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி கடற்கரை சாலை : திட்டப் பணிகளை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுச்சேரி கடற்கரை சாலையில் செய்து முடிக்கப்பட்ட ரூ. 85.96 லட்சம் மதிப்பிலான பணிகளை முதல்வர் ரங்கசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட கடற்கரை சாலையில் கார்கில் போர் நினைவுச் சின்னத்திலிருந்து வடக்கு கடல் நீரடிப் பாறை (Reef) வரையிலும், டூப்ளெக்ஸ் சிலையிலிருந்து பழைய துறைமுகம் வரையிலும் ரூ. 10.06 லட்சம் செலவில் அலங் கார எல்இடி விளக்குகள், கார்கில் போர் நினைவிடத்தில் ரூ. 9.46 லட்சத்தில் அலங்கார எல்இடி விளக்குகள், கடற்கரையில் ரூ. 29.47லட்சத்தில் எல்இடி இமேஜ் ப்ராஜெக்ஷன் விளக்குகள், ரூ.36.97 லட்சத் தில் கருங்கல் இருக்கைகள் என மொத்தம் ரூ. 85.96 லட்சத்துக்கான பணிகள் முடிக்கப்பட்டன.

முடிக்கப்பட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி புதுச்சேரி கடற்கரை சாலையில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் முதல்வர் ரங்கசாமி பங் கேற்று, முடிக்கப்பட்டவைகளை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப் பணித்தார்.

இந்நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தின் தலைவரும், தலை மைச் செயலருமான அஸ்வனி குமார், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தலைமைச் செயலதிகாரி அருண், இணை தலைமை செயல் அதிகாரி மாணிக்க தீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட கடற்கரை சாலையில்ரூ. 85.96 லட்சத்துக்கான பணிகள் முடிக்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

5 mins ago

இந்தியா

1 min ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்