வஉசி பிறந்த தினத்தையொட்டிதருமபுரியில் புகைப்பட கண்காட்சி :

By செய்திப்பிரிவு

சுதந்திரப் போராட்ட தியாகி வஉசி பிறந்த தினத்தையொட்டி, தருமபுரியில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்தில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

கப்பலோட்டிய தமிழர் என அழைக்கப்படும் சுதந்திரப் போராட்ட தியாகி வஉசி-யின் 150-வது பிறந்த தினத்தையொட்டி, வஉசி-யின் வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழக அரசு 14 வகை அறிவிப்புகளை அண்மையில் வெளியிட்டது.

அதன்படி தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வஉசி-யின் சுதந்திரப் போராட்ட வரலாற்றை அறிந்து கொள்ள உதவும் அரிய புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி பேருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று அரசு போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டலம் சார்பில் கண்காட்சி பேருந்து தருமபுரி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப் படுத்தப்பட்டது. கண்காட்சியை அரசு போக்குவரத்துக் கழக தருமபுரி கிளை மேலாளர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். உதவி பொறியாளர் சந்திரன் முன்னிலை வகித்தார்.

கண்காட்சியில், வஉசி-யின் குடும்ப வாழ்க்கை, சுதந் திரப் போராட்டத்தில் அவர் மேற்கொண்ட சமுதாய புரட்சி, தேச பக்தி உள்ளிட்டவை தொடர்பான 40-க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள் இடம்பெற்றன. கண்காட்சியை பொதுமக்கள் பலரும் பார்வையிட்டனர்.

இக்கண்காட்சி பேருந்து இன்று (6-ம் தேதி) தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகம், அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், தருமபுரி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்கு நிறுத்தப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

உலகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

சினிமா

11 hours ago

மேலும்