கடலூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு - கீழணையிலிருந்து சம்பா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு : 1 லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர் பாசனம் பெறும்

By செய்திப்பிரிவு

கீழணையிலிருந்து கடலூர் மாவட்ட டெல்டா பகுதி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு சம்பா பருவ பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

கீழணையிலிருந்து கடலுார் மாவட்டத்திற்கு நேரடி பாசனம் பெறும் கொள்ளிடம் வடக்குராஜன் வாய்க்கால், கான்சாகிப் வாய்க்கால், கவரப்பட்டு வாய்க் கால், கஞ்சன் கொல்லை வாய்க் கால், வடவார்,தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங் களில் பாசனம் பெறும் கொள்ளிடம் தெற்கு ராஜன் வாய்க்கால், குமுக்கிமன்னியார் மற்றும் வினாயகன் தெரு வாய்க்கால் ஆகிய வாய்க்காலில் பாசனத்துக்கு நேற்று தண்ணீர்திறக்கப்பட்டது. கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். அமைச்சர் கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ. கணேசன் ஆகியோர் பாசன மதகுகளை திறந்து வைத்தனர்.

வடவாறு வாய்க்காலில் விநா டிக்கு 600 கன அடியும், வடக்கு ராஜன் வாய்க்காலில் வினாடிக்கு 400 கன அடியும், தெற்கு ராஜன் வாய்க்காலில் விநாடிக்கு 400 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. மற்ற வாய்க்கால்களில் குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் கடலூர் மாவட்ட டெல்டா பகுதி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங் களில் மொத்தம் 1 லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர் பாசனம் பெறும். 9 அடி உயரம் கொண்ட கீழணையில் தற்போது 8.5 அடி தண்ணீர் உள்ளது.

இது போல காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியில் இருந்தும் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ராதா மதகில் விநாடிக்கு 10 கன அடியும், வீராணம் புதிய மதகில் விநாடிக்கு 74 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், சிதம்பரம் சார்-ஆட்சியர் மதுபாலன்,மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம், எம்எல்ஏக்கள் ஜெயங்கொண்டம் கண்ணன், சீர்காழி பன்னீர்செல்வம், காட்டுமன்னார்கோவில் சிந்தனைச்செல்வன், கடலூர் பொதுப்பணித் துறை நீர் ஆதார அமைப்பின் மேற்பார்வை பொறியாளர் ரவிமனோகர், சிதம்பரம் பொதுப் பணித்துறை நீர் ஆதார அமைப் பின் செயற்பொறியாளர் சாம்ராஜ்,உதவி செயற்பொறியாளர்கள் சிதம் பரம் பாலமுருகன்,அணைக்கரை அருணகிரி, விவசாய சங்க தலை வர்கள் இளங்கீரன், அத்திப்பட்டு மதிவாணன், ரெங்கநாயகி, ரவீந்தி ரன், பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தேவையான தண்ணீர் உள்ளது

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறியது:

வாய்க்கால்கள் தூர் வாரப்பட்டு விவசாயிகளின் ஆலோசனையின் பேரில் சம்பா பருவ பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்தஆண்டுக்கு தேவையான தண்ணீர்உள்ளது.

தண்ணீர் வரத்தும் நன்றாகஉள்ளது. டெல்டா பகுதி விவசாயி களுக்கு குறுவை தொகுப்பு ரூ. 61 லட்சத்துக்கு உரம், விதை நெல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடியில் 40 ஆயிரம்மெட்ரிக் டன் நெல் ஆறுவடை செய் யப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி மாவட்டத்தில் 108நேரடி நெல்கொள்முதல் நிலையங் கள் திறக்கப்பட்டுள்ளன. கிராமம்தோறும் கலைஞர் வேளாண்மை ஒருங்கிணைப்பு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருகிறது. விவசாயி களை மதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாதம் தோறும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் விவசா யிகளை சந்தித்து அவர்களின் குறை களை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

9 mins ago

தமிழகம்

15 mins ago

சுற்றுச்சூழல்

32 mins ago

விளையாட்டு

41 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்