தொழில் திட்ட அறிக்கை தயாரிக்க பயிற்சி :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட சிறுதொழில் சங்க பொதுச்செயலாளர் ஜெ.ராஜ் செல்வின் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தூத்துக்குடி மாவட்ட சிறு தொழில் சங்கம் (துடிசியா) இணைந்து நடத்தும் தொழில் மாதிரி மற்றும் தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல் குறித்த பயிற்சி ஆகஸ்ட் 23-ம் தேதி தொடங்குகிறது.

18 வயது நிரம்பிய 8-ம் வகுப்பு முடித்த தொழில் ஆர்வம் உள்ள ஆண், பெண் இருபாலரும் சேரலாம். பயிற்சி 23.08.2021-ல் தொடங்கி 25.08.2021 வரை 3 நாட்கள் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். பயிற்சிக் கட்டணம் ரூ.600. பயிற்சி ஆன்லைன் மூலம் நடத்தப்படும். முன்பதிவு செய்துகொள்ள கடைசி நாள் 21.08.2021. பயிற்சி பதிவு மற்றும் கூடுதல் தகவல்களுக்கு துடிசியா அலுவலகத்தை நேரில் அல்லது 9791423277 என்ற செல்போன் எண் மற்றும் 0461-2347005 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

8 mins ago

தமிழகம்

2 mins ago

இந்தியா

24 mins ago

தமிழகம்

35 mins ago

ஓடிடி களம்

52 mins ago

விளையாட்டு

59 mins ago

கல்வி

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்