எஸ்ஆர்எம் புதிய பதிவாளராக பொன்னுசாமி பொறுப்பேற்பு :

By செய்திப்பிரிவு

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் புதிய பதிவாளராக முனைவர் எஸ்.பொன்னுசாமி பொறுப்பேற்றார்.

புதிய பதிவாளராக பொறுப்பேற்றுள்ள எஸ்.பொன்னுசாமி காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் இயற்பியல் துறை மற்றும் நானோ தொழில்நுட்ப துறையில் உதவிப் பேராசிரியராக பணியில் சேர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். 15 ஆண்டுகளாக எஸ்ஆர்எம் தேர்வு கட்டுப்பாட்டாளராக பதவி வகித்து வந்ததுடன், பொறுப்பு பதிவாளராகவும் இருந்து வந்தார்.

ஜப்பான் நாட்டின் சிசூகோ பல்கலைக்கழக விசிட்டிங் பேராசிரியராகவும் உள்ள இவர் அறிவியல் ஆராய்ச்சி பணிகளில் அதிக ஆர்வம் உள்ளவர். படிக வளர்ச்சி, சோலார் ஷெல், தெர்மோ எலக்ட்ரிக்ஸ், நானோ மெடீரியல்ஸ் உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு 200-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி இதழ்களை வெளியிட்டுள்ளார்.

இவரது புதிய கண்டுபிடிப்புக்காக காப்புரிமை பெற்றுள்ளதுடன் 4 நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் அறிவியல் சம்பந்தமான 200-க்கும் மேற்பட்ட கருத்தரங்குகள், மாநாடுகளில் பங்கேற்று உரை நிகழ்த்தியுள்ளார். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

தமிழகம்

7 mins ago

இலக்கியம்

6 hours ago

இலக்கியம்

6 hours ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

31 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

சினிமா

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்