ராதாபுரத்துக்கு தண்ணீர் வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமையில், நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

விவசாயிகள் பேசியதாவது:`கன்னிப்பூ நெல் அறுவடைப் பணி விரைவில் தொடங்க விருப்பதால் கொள்முதல்நிலையங்களை அரசு ஏற்படுத்த வேண்டும். நெற்பயிர்களுக்கு தேவையான யூரியா உரம் தட்டுப்பாடாக உள்ளது. மாவட்டத்தில் பரவலாக வாழைப்பயிரில் வாடல்நோய் உள்ளது.

வேளாண்துறையினர் நடவடிக்கைஎடுக்கவேண்டும். திருப்பதிசாரம் நெல்ஆராய்ச்சி நிலையத்துக்குள் மழைக்காலங்களில் தண்ணீர் புகுந்து ஆபத்தான சூழல்ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வுகாணவேண்டும். நான்கு வழிச்சாலை பணியால் பாதிக்கப்பட்ட குளங்களில்எஞ்சிய பகுதிகளை சீரமைக்க வேண்டும்.விவசாயிகள் கொண்டு வரும் பொருட்களுக்கு சந்தைகளில் அதிக தீர்வை வசூல் செய்யப்படுகிறது’ என விவசாயிகள் தெரிவித்தனர்.

`வழக்கத்தைவிட கூடுதலாக நெல்கொள்முதல் நிலையங்கள் விரைவில்தொடங்கப்படும். சேதமான பாசன குளங்களை முறையாக சீரமைக்க தேசியநெடுஞ்சாலைத் துறையிடம் உரிய நிதியைப் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என ஆட்சியர் கூறினார்.

ராதாபுரம் கால்வாய்

``கன்னியாகுமரி மாவட்ட அணைகளில்இருந்து ராதாபுரம் பாசன கால்வாய்க்குதொடர்ச்சியாக நான்கரை மாதத்துக்கு தண்ணீர் கொடுப்பது சாத்தியமல்ல. இந்த நீர்விநியோக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என விவசாயிகள் வலியுறுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

இலக்கியம்

5 hours ago

தமிழகம்

28 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்