பொறியியல் மாணவர் சேர்க்கை - ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஒரு லட்சத்தை தாண்டியது :

By செய்திப்பிரிவு

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 26-ம் தேதி தொடங்கியது. பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனர். 9-வது நாளான நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி, ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 611 மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 74 ஆயிரத்து 309 பேர் பதிவுக் கட்டணத்தை செலுத்தியுள்ளனர். 56 ஆயிரத்து 935 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருப்பதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் டி.புருசோத்தமன் தெரிவித்தார்.

பிஇ, பிடெக் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தை பயன்படுத்தி வரும் 24-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என பொது கலந்தாய்வை நடத்த உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்