ஜாமீன் கோரி சிவசங்கர் பாபா மனு - சிபிசிஐடி போலீஸார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு :

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக போக்ஸோ சட்டத்தின்கீழ் சிவசங்கர்பாபாவை போலீஸார் 3 வழக்குகளில் கடந்த ஜூன் 16-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். அதில் 2 வழக்குகளில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் மனுவில் கூறியிருப்பதாவது:

கேளம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கும் எனக்கும் எந்ததொடர்பும் இல்லை. நீலாங்கரையில் உள்ள 12 கிரவுண்ட் நிலத்தில்சம்ரக்‌ஷனா என்ற அறக்கட்டளையை மட்டுமே நடத்தி வருகிறேன்.

ஆன்மிகம் மற்றும் தமிழ்சார்ந்த சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக மட்டுமே கேளம்பாக்கம் பள்ளிக்கு சென்று வந்தேன். எனக்கும், பள்ளிக்கும் எதிராக புகார் அளித்துள்ள இளம்பெண், புகார்அளிப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்புவரை அந்த பள்ளியில் நாட்டிய அரங்கேற்றம் செய்துள்ளார்.

மேலும், எனக்கு ரத்தக்கொதிப்பு, நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளன. இந்த வழக்கில் தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்குஇல்லை. ஆன்மிக பயணம் செல்வதற்காக டெல்லி சென்றபோது என்னை சிபிசிஐடி போலீஸார் கைதுசெய்தனர். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆக.11-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

சினிமா

14 mins ago

சினிமா

28 mins ago

தமிழகம்

18 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

31 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

33 mins ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்