ரயில் பெட்டியின் இணைப்பு துண்டிப்பு :

By செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா வில் இருந்து ஸ்டீல் பொருட்களை ஏற்றிய சரக்கு ரயில் ஒன்று 65 பெட்டிகளுடன் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், ஜோலார்பேட்டை வழியாக பெங்களூரு நோக்கி நேற்று காலை சென்றுக் கொண்டிருந்தது.

ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் அருகே காலை 11 மணியளவில் சரக்கு ரயில் வந்தபோது, பெட்டிகளுக்கு இடையேயுள்ள ‘வேகம் பைப்’ இணைப்பு திடீரென துண்டானது. இதனால், சரக்கு ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜோலார்பேட்டை ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், ஜோலார்பேட்டை யில் இருந்து ரயில் பெட்டி பராமரிப்புப்பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெட்டிகளுக்கு இடையே துண்டிக்கப்பட்ட இணைப்பை சுமார் 1 மணி நேரத்தில் சரி செய்தனர். அதன்பிறகு, பிற்பகல் 12.15 மணியளவில் சரக்கு ரயில் அங்கிருந்து மிதமான வேகத்தில் புறப்பட்டது.

சரக்கு ரயில் பழுதாகி ஆம்பூர் அருகே நடுவழியில் நின்றதால் சென்னை - பெங்களூரு இடையே செல்லும் பயணிகள் ரயில் மற்றும் அதி விரைவு ரயில்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால், ரயில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

இந்தியா

50 mins ago

வாழ்வியல்

46 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்