மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து - குறைதீர்வு கூட்டத்தில் இருந்து : விவசாயிகள் சங்கத்தினர் வெளிநடப்பு :

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகள் கேட்காத இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்துள்ள மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, குறைதீர்வு கூட் டத்தை விவசாயிகள் சங்கத்தினர் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வருவாய் கோட் டாட்சியர் அலுவலகத்தில் விவ சாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத் தில், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் பிரசன்னா, சங்கரன், சேரலாதன், மெய்ய நாதன், காவல் ஆய்வாளர் முரளிதரன், தீயணைப்பு அலுவலர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் மணி, பாஸ்கர், சுபாஷ் உள்ளிட்டோர் பேசும்போது, ‘‘மாவட்டத்தில் விவசாயிகள் கேட்காத இடங்களில் திமுக பிரமுகர்களுக்கு ஆதரவாக புதிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளனர்.விவசாயிகள் கேட்ட இடங் களை வேண்டுமென்றே தவிர்த் துள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் இந்த செயலை கண்டித்து கூட்டத்தை புறக் கணிக்கிறோம்’’ என கூறி அங்கிருந்து வெளியேறினர்.

மேலும், தங்களது கோரிக்கை தொடர்பான மனுவையும் வருவாய் கோட்டாட்சியரிடம் வழங்கினர்.

பாஜக நிர்வாகி ரமேஷ் பேசும்போது, ‘‘மூதூர், வேலூர்பேட்டை ஏரி தூர்வாரும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் எப்போது தொடங்கும்’’ என்றார். இதற்கு அதிகாரிகள், ‘‘நிதி இல்லாததால் பணிகள் தொடர முடியவில்லை’’ என்றனர்.

கீழ்வெங்கடாபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கிருஷ்ணன் கூறும்போது, ‘‘எங்கள் ஊராட்சியில் செயல்பட்டு வந்த 2 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடியுள்ளனர்.

எங்கள் கிராமத்தில் அதிக நெல் விளைச்சல் நடைபெறுகிறது. நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நாங்கள் எங்கு செல்ல முடியும். எங்கள் பகுதியில் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்காவிட்டால் நெமிலி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடு வோம்’’ என்றார்.

இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

28 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

55 mins ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

48 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்