பெரம்பலூர் அருகே சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல் : வனத் துறையினர் விசாரணை

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் அருகே சந்தன மரங்களை வெட்டி கடத்திய சம்பவம் தொடர்பாக விசாரிக்க வனச்சரகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் அருகே கீழக்கணவாய் மலையடிவாரத்தில் தனியார் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான நிலங்களிலிருந்து 10-க்கும் மேற்பட்ட சந்தனமரங்களை சிலர் வெட்டி கடத்திச் சென்று விட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் கண்ணன் என்பவர் அண்மையில் புகார் மனு அளித்திருந்தார்.

இதையடுத்து மாவட்ட வன அலுவலர் குகனேஸ் உத்தரவின் பேரில் வனச்சரகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு சந்தன மரங்கள் கடத்தியது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையில், தனியாருக்கு சொந்தமான இடத்திலிருந்து 20 ஆண்டுக்கும் மேல் ஆன 3 சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளதும், முதிர்ச்சியடையாத 3 மரங்களை அறுத்துப் பார்த்துவிட்டு அப்படியே விட்டுச் சென்றதும் தெரியவந்துள்ளது. மேலும், வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் உள்ள சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

தமிழகம்

4 mins ago

தமிழகம்

17 mins ago

சினிமா

46 mins ago

க்ரைம்

27 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

40 mins ago

தொழில்நுட்பம்

22 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்