பழங்கால குடுவை கண்டெடுப்பு :

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், சிங்கம் புணரி அருகே கழிப்பறைக்காக தோண்டிய குழியில் பழமையான கருப்புநிற மண் குடுவை கண்டெடுக்கப்பட்டது.

சிங்கம்புணரி அருகே ஜெயங்கொண்டநிலையைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி பொன்னழகு. இவர் தனது வீட்டின் அருகே கழிப்பறை கட்ட குழி தோண்டினார். அப்போது 2 அடி ஆழத்தில் பழமையான கருப்பு நிற மண் குடுவை இருந்தது. இதுகுறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வட்டாட்சியர் திரு நாவுக்கரசு, கிராம நிர்வாக அலுவலர் சசிவர்ணம் ஆகியோர் மண் குடுவையை சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து வட்டாட்சியர் திருநாவுக்கரசு கூறுகையில், பழமையான குடுவையாக இருப்ப தால் தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் ஆய்வு செய்த பின்னர் தான் குடுவை எந்த காலத்தைச் சேர்ந்தது என்று தெரியவரும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்