வாணியம்பாடி, ஆம்பூர் நகராட்சியில் - பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு அபராதம் : மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவு

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக, வாணியம்பாடி வளையாம்பட்டு பகுதியில் நகராட்சி குப்பைக் கிடங்கில் நடைபெற்று வரும் குப்பை தரம் பிரிப்பு பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக 2.5 ஏக்கர் பரப்பளவில் கொட்டப்பட்டுள்ள குப்பையை தரம் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 35 ஆயிரம் கன சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட குப்பையை தரம் பிரிக்கும் பணி வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படு கிறது. இதனைத் தொடர்ந்து,ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட தார்வழிச் சாலை பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் குப்பை தரம் பிரிக்கும் பணியை ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்தார்.

சுமார் 8.17 ஏக்கர் பரப்பளவில் 1 லட்சத்து 14 ஆயிரம் கன சதுர மீட்டர் அளவில் கொட்டப்பட்டுள்ள குப்பை தரம் பிரிப்பு பணியை வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

பின்னர், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் நகராட்சியில் வீடு வீடாக குப்பை சேகரிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களிடம் இருந்து அதிகப்படியான அபராதத் தொகையை வசூலிக்க வேண்டும் எனஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார். மேலும், அக்டோபர் 2-ம் தேதிக்குள் குப்பைகள் இல்லாத சுகாதாரமான மாவட்டம் என்ற நிலைய அடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரி களுக்கு அவர் உத்தரவிட்டார்.

ஆம்பூர் நகராட்சி ஏ.கஸ்பா பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் அமையவுள்ள பிரதான கழிவுநீர் உந்து நிலைய இடத்தையும் ஆட்சியர் ஆய்வு செய்ததுடன் நிலுவையில் உள்ள பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அப்போது, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ராம்சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

9 mins ago

ஜோதிடம்

24 mins ago

ஜோதிடம்

37 mins ago

வாழ்வியல்

42 mins ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

58 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்