ரயில்வே சுரங்கப்பாதை போக்குவரத்துக்கு திறப்பு :

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி ரயில்வே சுரங்கப்பாதையில் நடந்த பராமரிப்பு பணி நிறைவடைந்ததால், போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டது.

கோவில்பட்டியில் இளையர சனேந்தல் சாலையில் உள்ள சுரங்கப்பாதையின் பக்கவாட்டுச் சுவர்களில் இருந்து கழிவுநீர் கசிந்து, சாலையின் நடுப்பகுதியில் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

இதனை சீர்செய்யும் வகையில், பராமரிப்பு பணிகள் ரூ. 2 லட்சம் செலவில் கடந்த 1-ம் தேதி தொடங்கின. சுரங்கப்பாதையின் தரைத்தளம் 3 இஞ்ச் வரை உடைக்கப்பட்டு, மீண்டும் 5 இஞ்ச் உயரத்துக்கு கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. தரைத்தளத்தில் தண்ணீர் தேங்குவதை தடுக்க, அதன் ஓரங்களில் சிறிய அளவிலான ஓடை அமைக்கப்பட்டது. இப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று முதல் போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டது.

சுரங்கப்பாதையின் தரைத்தளத்தின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓடையில் தண்ணீர் செல்வதால், நடுப்பகுதியில் தண்ணீர் தேங்கவில்லை. மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பிற வாகனங்கள் எளிதாக சென்று வந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்