பள்ளிகொண்டா காவல் துறையினருக்கு பாராட்டு :

By செய்திப்பிரிவு

வேலூர்: பள்ளிகொண்டாவில் கார், கன்டெய்னர் லாரியில் கடத்த முயன்ற 4 டன் குட்கா, புகையிலை பார்சலை பறிமுதல் செய்த காவல் துறையினரை எஸ்.பி., செல்வகுமார் பாராட்டினார்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய ஆய்வாளர் மனோன்மணி தலைமையிலான காவலர்கள் அங்குள்ள சுங்கச்சாவடி அருகே நேற்று முன்தினம் மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கிடமாக வந்த கார் மற்றும் கன்டெய்னர் லாரியை மறித்து சோதனையிட்டனர். அதில், 4,161.45 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பார்சலை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கோபால் (30), தாம்பரம் பெருங்களத்தூரைச் சேர்ந்த ராஜா குருவி (25), விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், கன்டெய்னர் லாரி என பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகொண்டா காவல் நிலைய ஆய்வாளர் மனோன்மணி உள்ளிட்ட காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்