பெருஞ்சாணி அணையில் தண்ணீர் திறப்பு :

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட மலையோர பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்வதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரள்கிறது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை நீர்மட்டம் 44.54 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 963 கனஅடி தண்ணீர் வரும் நிலையில், அணையில் இருந்து 506 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் நேற்று 74.53 அடியாக உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 739 கனஅடி தண்ணீர் வந்ததால், அணையில் இருந்து நேற்று 100 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. சிற்றாறு அணைகளுக்கு நீர்வரத்து இல்லாத நிலையில் நீர்மட்டம் 15.66 அடியாக உள்ளது. முக்கடல் அணை நீர்மட்டம் 22.4 அடியாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 mins ago

தமிழகம்

8 mins ago

விளையாட்டு

27 mins ago

சினிமா

28 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

49 mins ago

கருத்துப் பேழை

58 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்