செப்.5-ல் நீட் தேர்வு என வெளியான செய்தி தவறு : தேசிய தேர்வு முகமை விளக்கம்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சிபிஎஸ்இ 10 மற்றும் பிளஸ் 2வகுப்புத் தேர்வுகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டன. இதனால் நீட் தேர்வு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. தேர்வுகுறித்த அறிவிப்பை விரைந்து வெளியிட வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோரும் மத்திய கல்வி அமைச்சகத்தை வலியுறுத்தினர்.

இதனையடுத்து, நீட் தேர்வு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நேற்று ஆலோசனைக்கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தனது அமைச்சர் பதவியைரமேஷ் பொக்ரியால் ராஜினாமா செய்ததால்ஆலோசனைக் கூட்டம் நடைபெறவில்லை.

இதற்கிடையே, 2021-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 5-ம் தேதி நடத்தப்படும்என்றும் பேனா, காகித முறையில் இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 11 மொழிகளில் தேர்வு நடைபெறும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியானது.

ஆனால், இதற்கு தேசிய தேர்வு முகமைமறுப்பு தெரிவித்துள்ளது. நீட்தேர்வு தொடர்பாகத் தேர்வு முகமை எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. சமூகஊடகங்களில் பரவும் செய்தி தவறானது.எனவே, மாணவர்களும், பெற்றோரும் தேர்வு தேதி குறித்து அச்சப்படத் தேவையில்லை. நீட் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என விளக்கம் அளித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

9 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

15 mins ago

ஆன்மிகம்

25 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வணிகம்

9 hours ago

மேலும்