சுற்றுலா வாகனங்கள்பூங்கா பகுதியில் நிறுத்தம் : குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

உடுமலை நகராட்சிக்கு உட்பட்டஅனுசம் நகர் பகுதியில் நகராட்சிக்குசொந்தமான பூங்காவை, அபிராமிநகர்,நாச்சிமுத்து நகர், யசோதா ராமலிங்கம் நகர், மதியழகன் நகர் ஆகிய குடியிருப்புகளைச் சேர்ந்தமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கூடுதல் பேருந்து நிலையம் கட்டப்படும் பகுதியில் சுற்றுலா வாகனங்கள், சரக்கு லாரிகளை நகராட்சிப் பூங்கா இடத்தில்நிறுத்துவதற்கு நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பூங்காவின் ஒரு பகுதி சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டுள்ளது. நகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு, அப்பகுதியில் உள்ள குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நகராட்சி ஆணையரை சந்தித்து, கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக மக்கள் கூறும்போது ‘‘நகர் ஊரமைப்புத் துறையால் ஒப்புதல் வழங்கப் பட்டுள்ள மனைப்பிரிவுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பயன்பாட்டுக்கு தவிர, வேறு எந்த பயன்பாட்டுக்கும் உபயோகிக்கக் கூடாது. இதனை மாற்றும் அதிகாரம் அரசுக்கோ மற்றும் திட்ட அனுமதி வழங்கிய துறைக்கோ கிடையாது என சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

தமிழகம்

15 mins ago

உலகம்

26 mins ago

உலகம்

35 mins ago

தமிழகம்

44 mins ago

இந்தியா

40 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்