நிவாரணம் வழங்க கிராமிய கலைஞர்கள் கோரிக்கை :

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும், கிராமிய கலைஞர் களுக்கு நிவாரணம் வழங்கி உதவ வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக தருமபுரி மாவட்ட கிராமியக் கலைஞர்கள் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில பொருளாளர் குமரவேல் தலைமையில் நிர்வாகிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா ஊரடங்கால் கிராமிய கலைஞர்கள் நிகழ்ச்சிகள் நடத்த வழியின்றி, வறுமையில் தவித்து வருகிறோம். தருமபுரி மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் உள்ளனர். தற்போது ஊரடங்கால் எவ்விதமான வருவாய் இல்லாத நிலையில், மாவட்ட ஆட்சியர் எங்களுக்கு நிவாரணம் வழங்கி உதவ வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கிராமிய கலைஞர்கள் வேடமணிந்தும், இசை கருவிகள் வாசித்தப்படியும் மனு அளிக்க வந்தது குறிப்பிடதக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

உலகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்