வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு விரைவில் ரோப் கார் வசதி : எம்பி மற்றும் எம்எல்ஏ தகவல்

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் மற்றும் பக்தவச்சலேஸ்வரர் கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு, தமிழக அரசின் கரோனா நிவாரணநிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி, செயல் அலுவலர் குமரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில், காஞ்சிபுரம் எம்பி செல்வம் மற்றும் திருப்போரூர் எம்எல்ஏபாலாஜி சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். மேலும், அவர்கள், மேற்கண்ட கோயில்களில் பணிபுரியும் 31 அர்ச்சகர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் ரொக்கத்துடன் அரிசி உள்ளிட்ட 15 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினர்.

இதையடுத்து, கோயிலில் பல்வேறு நிலைகளில் பணிபுரியும் 22 தொழிலாளர்களுக்கு தலா 10 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், திமுகவின் வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மணி, நகர செயலாளர் யுவராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக நிகழ்ச்சியில் எம்பி மற்றும் எம்எல்ஏ பேசியதாவது: மலைமீது அமைந்துள்ள வேதகிரீஸ்வரரை அனைவரும் தரிசிக்கும் வகையில், மலைமீது வாகனத்தில் செல்வதற்காக வாகனப்பாதைமற்றும் ரோப் கார் வசதி ஏற்படுத்துவதற்காக நிர்வாகரீதியான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் மேற்கண்ட வசதிகளுக்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

12 mins ago

உலகம்

33 mins ago

வாழ்வியல்

52 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

மேலும்