எல்ஐசி நிறுவனத்தின் சார்பில் - புதிய ‘ஷாகுன்’ பரிசு கார்டு அறிமுகம் :

By செய்திப்பிரிவு

எல்ஐசி நிறுவனம், ஷாகுன் என்ற பெயரில் பரிசு அட்டையை (கிஃப்ட் கார்டு) அறிமுகப்படுத்தி உள்ளது.

எல்ஐசி நிறுவனத்தின் கார்டு சர்வீஸ் லிமிடெட் நிறுவனம், ஐடிபிஐ வங்கியுடன் இணைந்து ஷாகுன் என்ற பெயரில் பரிசு அட்டையை (கிஃப்ட் கார்டு) அறிமுகப்படுத்தியுள்ளது. 3 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் இந்தப் பரிசு அட்டையின் மூலம், ரூ.500 முதல் ரூ.10 ஆயிரம் வரை பரிசு வழங்கலாம்.

அத்துடன், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் இ-காமர்ஸ் வலைதளத்தில் பயன்படுத்தலாம். தொடர்பு இல்லா பரிவர்த்தனையின் கீழ், பாயின்ட் ஆஃப் சேல் கருவி மூலம், இந்த பரிசு அட்டையைப் பயன்படுத்தி ரூ.5 ஆயிரத்துக்கு பொருட்களை வாங்கலாம்.

மேலும், இந்த அட்டையை மொபைல் செயலி பாஸ்புத்தகத்துடன் இணைத்து விட்டால், இந்த அட்டையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள், அட்டையில் உள்ள பண இருப்பு உள்ளிட்ட விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் பரிசு அட்டையை எல்ஐசி நிறுவனத்தின் தலைவர் எம்.ஆர்.குமார் அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில், எல்ஐசி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்கள், தலைமை செயல் அதிகாரிகள், எல்ஐசி கார்டு சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ராகேஷ் சர்மா, ஐடிபிஐ வங்கியின் மேலாண்மை இயக்குநர் திலீப் அஸ்பே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இவ்வாறு எல்ஐசி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

40 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

மேலும்