குருசடியை அகற்றக்கோரி பாஜக மறியல்; 135 பேர் கைது :

By செய்திப்பிரிவு

மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே அமைக்கப்பட்ட கிறிஸ்தவ குரு சடியை அகற்றக்கோரி நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 135 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமாக மாத்தூர் தொட்டிப்பாலம் விளங்குகிறது. அதன் அருகே கிறிஸ்தவ குருசடி அமைப்பதற்கான பணி சமீபத்தில் நடந்தது. இதற்கு, பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, குமரி மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அப்போது, `முறையான அனுமதியின்றி குருசடி அமைக்கக் கூடாது. அதுபோன்று அமைத்தால் அவற்றை அகற்ற வேண்டும்’ என அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.

குருசடியை அகற்றுவதற்கான நடவடிக்கையை இதுவரை எடுக்காததால், மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே குருசடி அமைக்கப்பட்ட பகுதியில் பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்பினர் நேற்று திரண்டனர். பின்னர், திருவட்டாறில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், நேற்று மதியத்தில் இருந்து மாலை வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட பாஜக மாவட்டத் தலைவர் உட்பட 135 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, குமரி மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

திருநெல்வேலி

திருநெல்வேலியில் வண்ணார் பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் பகுதியில் பாஜக மாவட்ட தலைவர் மகாராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

உலகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்