கரோனா கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் - ஊரடங்கில் அறிவித்த தளர்வுகள் எந்த நேரத்திலும் திரும்ப பெறப்படும் : அவசியமின்றி வெளியில் வரவேண்டாம் என முதல்வர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

கரோனா கட்டுப்பாடுகள் மீறப்பட் டால் எந்த நேரத்திலும் ஊரடங்கு தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வரும் 21-ம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு தளர்வு களுக்கான வழிமுறைகளை பின்பற்றி நடக்குமாறு மக்க ளுக்கு வேண்டுகோள் விடுத்து, தொலைக்காட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பேசிய தாவது:

அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகளால் கரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுக்குள் வந்திருக்கிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 36 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இது 50 ஆயிரம் வரை உயரும் என்று மருத்துவர்கள் கூறினர். ஆனால், அரசு எடுத்த நடவடிக்கைகளால் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. நாள்தோறும் தொற்று எண்ணிக்கை விரைவாக குறைந்து வருகிறது. மருத்துவ மனைகளில் படுக்கைகள் இல்லை, ஆக்சிஜன் வசதி இல்லை என்ற நிலை தற்போது இல்லை.

அரசு பல்வேறு முனைகளில் எடுத்த முயற்சிகளால்தான் 2 வாரங்களில் அனைத்தும் கட்டுக்குள் வந்துள்ளன. ஒருவ ரிடம் இருந்து மற்றொருவருக்கு வைரஸ் பரவும் சங்கிலியை முதலில் உடைக்க வேண்டும். அதற்காகத்தான் முழு ஊரடங்கு அறிவித்தோம். ஊரடங்கு கட்டுப்பாட்டை மக்கள் முழுமையாக கடைபிடித்ததால்தான், பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. விதிகளை பின்பற்றி நடந்து கொண்ட மக்களுக்கு நன்றி.

ஊரடங்கை இன்னும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்க பொதுமக்களிடம் இருந்தே கோரிக்கை வந்தது. மக்களின் எண்ணங்களைத்தான் அரசு செயல்படுத்தி வருகிறது. அரசு என்னதான் கட்டுப்பாடுகளை விதித்தாலும், அதை மக்கள் பின்பற்றினால்தான் முழு வெற்றி சாத்தியம். கரோனா கட்டுக்குள் வந்துள்ளதே தவிர, முழுமையாக அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. மக்கள் மிக, மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது காணொலியில் பேசிய கடை நடத்துவோர், ‘‘கரோனா காலத்தில் வாழ்வாதாரம் இல்லாமல் வீட்டில் இருந்தோம். முதல்வர் கடை வைக்கலாம் என்று சொன்னதால் விதிமுறைகளுக்கு உட்பட்டு நல்லபடியாக கடைகளை நடத்துகிறோம். முதல்வருக்கு நன்றி’’ என்றனர்.

இதற்கு பதிலளித்த முதல்வர், ‘‘இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு கண்ணும் கருத்துமாக உள் ளது. அரசின் கட்டுப்பாடுகளுக்கு, முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டிய கடமை மக்களிடம் இருக்கிறது. தளர்வுகளுக்கான உண்மை நோக்கத்தை உணர்ந்து மக்கள் செயல்பட வேண்டும். அவசியம் இல்லாமல் வெளியில் நடமாடக் கூடாது’’ என்றார்.

துணிக்கடை உரிமையாளர் ஒருவர், ‘‘எங்கள் கடைகளுக்கும் கொஞ்சம் தளர்வுகளை கொடுத் தால் நன்றாக இருக்கும். தமிழக அரசு என்ன விதிமுறைகளை சொல்கிறதோ, அவற்றை நாங்கள் கண்டிப்பாக கடைபிடிப்போம்’’ என்றார்.

இதற்கு பதிலளித்த முதல்வர், ‘‘தளர்வுகள் தருவது முக்கிய மல்ல; அதற்கான விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். தேநீர் கடைகளில் கூட்டம் கூடு வதைத் தவிர்த்து, தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். முடிதிருத்தும் நிலை யங்களிலும் கட்டுப்பாடுகளை கடை பிடிக்க வேண்டும். விமர்சனங்கள் வரும் நிலையிலும், மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. போலி மது, கள்ள மது போன்றவை தமிழகத்தை சீரழித்து விடக்கூடாது என்பதில் அரசு கவனமாக உள் ளது. டாஸ்மாக் கடைகள் முழுமை யான கட்டுப்பாடுகளை பின்பற்றி இயங்கும்.

பொதுப் போக்குவரத்து

கரோனா கட்டுப்பாடுகள் மீறப் பட்டால் எந்த நேரத்திலும் இந்த தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என்று எச்சரிக்கையாகவே சொல் லிக் கொள்கிறேன். கட்டுப்பாட்டை மீறுபவர்கள், தங்களுக்கு மட்டு மின்றி நாட்டுக்கும் தீமை செய் பவர்கள் என்பதை உணர வேண் டும். காவல்துறை கண்காணிப்பு இல்லாமலேயே கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்பவர்களாக தமிழக மக்கள் மாற வேண்டும்.

முழு ஊரடங்குக்கு முற்றுப் புள்ளி வைப்பதுபோல் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். பொதுப் போக்குவரத்து சேவை விரைவில் இயங்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும். இப்படி ஒவ்வொன்றாக செயல்படுத்த வேண்டும் என்றால், அதற்கு மக்கள் துணை அவசியம்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

ஆட்சியர்களுடன் ஆலோசனை

கரோனா தடுப்புப் பணிகள் குறித்து 22 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். இதில் அமைச்சர்கள், தலைமைச் செயலர், மருத்துவ நிபுணர்கள் பங்கேற்க உள்ளனர். கரோனா பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படுவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

11 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்