முழுஊரடங்கில் விதிமீறியதாக : நீலகிரி மாவட்டத்தில் 3,979 வழக்குகள் :

By செய்திப்பிரிவு

உதகை: முழு ஊரடங்கில் விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 24-ம் தேதி முதல் நேற்று வரை நீலகிரி மாவட்டத்தில் 3,979 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், 1,033 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உதகை நகரப் பகுதியில் முக கவசம் அணியாத 422 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.84,400 அபராதம் வசூலிக்கப்பட்டது. ஊரகப் பகுதிகளில் 358 பேரிடம் ரூ.71,600 அபராதம் வசூலிக்கப்பட்டது.

குன்னூர் கோட்டத்தில் முகக் கவசம் அணியாத 334 பேரிடம் ரூ.66,800, கூடலூரில் 104 பேரிடம் ரூ.20,800, தேவாலாவில் 68 பேரிடம் 13,600 என 1,268 பேரிடம் ரூ.2,57,200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்கள் மீது உதகை நகரத்தில் 76 பேர் மீது வழக்கு பதிந்து ரூ.38,000, ஊரக பகுதியில் 24 பேர் மீது வழக்கு பதிந்து ரூ.16,500, குன்னூரில் 32 பேர் மீது வழக்கு பதிந்து ரூ.16,000, கூடலூரில் 8 பேரிடம் ரூ.4000, தேவாலாவில் இருவரிடம் ரூ.1000 என மொத்தம் 142 பேர் மீது வழக்கு பதிந்து ரூ.75,500 அபராதம் வசூலிக்கப்பட்டது.

இதேபோல, ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே வந்த 2,378 பேரிடம் ரூ.11 லட்சத்து 89 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

685 இருசக்கர வாகனங்கள், 343 நான்கு சக்கர வாகனங்கள், 5 கனரக வாகனங்கள் என 1,033 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 mins ago

விளையாட்டு

6 mins ago

தமிழகம்

30 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்