தருமபுரியில் கரோனா பாதித்த பகுதியில் எம்எல்ஏ ஆய்வு :

By செய்திப்பிரிவு

தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட அண்ணாமலை கவுண்டர் தெரு, முனியன் தெரு, சத்திரம் மேல் தெரு ஆகிய பகுதிகளில் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம், 24-வது வார்டு பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தியது.

இந்நிலையில் நேற்று தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், நகராட்சி 24-வது வார்டில் ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது:

நகராட்சிக்குட்பட்ட 24-வது வார்டில் கரோனாவால் 15-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்தார். தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து பொதுமக்கள் யாரும் வீட்டை, வீட்டு வெளியே வராமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நகராட்சி நிர்வாகம் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளவும், கிருமி நாசினி தினமும் தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது, என்றார்.

ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி, பாமக மாநில இளைஞரணி செயலாளர் முருகசாமி, மாவட்ட செயலாளர் பெரியசாமி, மாநில துணை தலைவர் சாந்தமூர்த்தி, நகர செயலாளர் சத்யமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

25 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்