கரோனா இறப்பு சான்றிதழ் விவகாரத்தில் - முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கரோனா இறப்பு சான்றிதழ் விவகாரத்தில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கரோனாவால் தற்போதும் அசாதாரண சூழ்நிலை தான் நிலவுகிறது. தடுப்பூசி குறித்த சரியான அறிவிப்புகளை மாநில அரசு வெளியிடவில்லை. இரண்டாம் டோஸ் போடுபவர்களுக்கான தடுப்பூசியும் இல்லை. தடுப்பூசிகளைப் பெற முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

கரோனாவால் இறந்தோருக்கு பிரதமர் ரூ.10 லட்சமும் முதல்வர்ரூ.5 லட்சமும் அறிவித்துள்ளனர். ஆனால், கரோனாவால் இறந்தோரின் குடும்பத்தினருக்குச் சான்றிதழ் அளிக்க மறுக்கின்றனர். எனது தொகுதியிலேயே நிறைய பேருக்கு இறப்புச் சான்றிதழ் கொடுக்கவில்லை. கரோனாவால் இறப்பவர்களுக்கு காரணம் போட முடியாது எனக் கூறப்படுகிறது. பிறகு எப்படி இறந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் தர முடியும். கரோனாவால் இறந்தோரின் இறப்புச் சான்றிதழ் விவகாரத்தில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும். கூட்டுறவுத் துறை அமைச்சராக இருக்கும் ஐ.பெரியசாமிக்கு துறையைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை.

அவர் விருப்பம் இல்லாமல் அத்துறையில் அமைச்சராக உள்ளார். அந்தத் துறையை அவர் ஏற்றுக்கொள்ள வில்லை என்றும் மனவெறுப்பில் உள்ளதாகவும் கூறுகின்றனர். பயிர்க்கடன் இல்லாதவர்களுக்கு தள்ளுபடி செய்ய முடியாது. யார் எங்கேயும் தவறு செய்ய முடியாது. நான் வகித்த துறையைப் பற்றி குறை கூறினால் அதற்குப் பதில் சொல்ல நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

55 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்