தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் முன் - குமரியில் நீர்நிலை கரைகளை பலப்படுத்த உத்தரவு :

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்கு முன்பு குளங்கள், கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளின் கரையோரப் பகுதிகளில் மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைப்பதற்கு பொதுப்பணித்துறை நீராதார அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் யாஸ் புயல் காரணமாக பெய்த கனமழையால் மழைநீர் தேங்கி சேதமடைந்த பகுதிகளை தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்கு முன்சரிசெய்வது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் பாதிக்காத வகையில் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

மேலும், பருவமழை தீவிரமடையும் முன் நீர்நிலை ஓடைகளை சரிசெய்வதுடன், குளங்கள், கால்வாய்கள் மற்றும் அணைகளின் கரையோரப் பகுதிகளில் மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க பொதுப்பணித்துறை நீராதார அலுவலர்களுக்கு உத்தரவு பிறப் பிக்கப்பட்டது.

மேலும், அனைத்துத்துறை அலுவலர்களும் பேரிடர் காலங்களில் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மெர்சி ரம்யா,நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

46 mins ago

ஜோதிடம்

49 mins ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்