இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முயற்சியால் - ஏடூரில் துணை சுகாதார நிலையம் திறப்பு :

By செய்திப்பிரிவு

கும்மிடிப்பூண்டி அருகே ஏடூர் ஊராட்சியில் இருந்த துணை சுகாதார நிலைய கட்டிடம் 15 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்தது.

இதனால், இப்பகுதியைச் சேர்ந்தவர்களின் மருத்துவ தேவைக்காக ஏடூர் ஊராட்சியில் பயன்படுத்தப்படாமல் உள்ள கிராம சேவை மையத்துக்காக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என ஊராட்சி தலைவர் ரேவதி அண்ணாமலை, கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ் ஆகியோரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஏடூர் கிளை நிர்வாகிகளான விக்கி, விஷ்ணு, நரேஷ் ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, கிராம சேவை மைய கட்டிடத்தில் தற்காலிகமாக துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

அதை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மகேஷ் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில், கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ், வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ், ஊராட்சித் தலைவர் ரேவதி அண்ணாமலை, துணைத் தலைவர் வெங்கடேசன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் மதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுலா

4 hours ago

மேலும்