கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம் :

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் தலை மையில், செயலாளர் ஆதிமூலம், துணைத் தலைவர் நவநீதன், பொருளாளர் செந்தில் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

பின்னர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அவர்கள் அளித்த மனு விவரம்:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2020-2021-ம் ஆண்டு கடும் மழை காரணமாக மகசூல் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்தனர். விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செலுத்தியுள்ளனர். அதற்குரிய இழப்பீடு தொகையை உடனடியாக வரக்கூடிய பருவ காலத்துக்கு முன்பு வழங்க வேண்டும். மேலும், 2019-2020-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீடு தொகையும் இன்னும் பல விவசாயிகளுக்கு வராமல் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் பெய்த தொடர் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்கப்பட்டு வந்தது. பின்னர் தேர்தலால் நிறுத்தி வைக்கப்பட்டது. அதை உடனடியாக வழங்க வேண்டும். தோட்டக்கலைத் துறை மூலம் வழங்க வேண்டிய வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றுக்கான நிவாரணம் வழங்கப்படவில்லை. அதனை விரைந்து வழங்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

இந்தியா

8 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தொழில்நுட்பம்

10 hours ago

சினிமா

11 hours ago

க்ரைம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்