எழுத்தாளர் கி.ரா படித்த பள்ளி ரூ.20 லட்சத்தில் புதுப்பிக்கப்படும் : தூத்துக்குடி ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி வட்டம் இடைச் செவல் கிராமத்தில் மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பாக ஆட்சியர் கி.செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறும்போது, “இடைச்செவல் கிராமத்தில் எழுத்தாளர் கி.ரா. படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பழமை மாறாமல் புதுப்பிக்க ஊராட்சி பொது நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் நடவடி க்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான நிதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 8 சதவீதமாக இருந்தனர். தற்போது அது 14 சதவீதமாக உயர்ந்துள்ளது. சுகாதார பணியாளர்கள் 90 சதவீதத்துக்கு மேலும், முன்கள பணியாளர்கள் 85 சதவீதமும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் 1.48 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு ள்ளது. தடுப்பூசி வந்தவுடன் மீண்டும் முகாம்கள் நடத்தப்படும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து அரசு ஊழியர்களுக்காக போதிய அளவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன” என்றார்.

முன்னதாக ஆசூர் ஊராட்சியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை சந்தித்து, சிகிச்சைகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.

மாவட்டத்தில் 1.48 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

8 mins ago

ஜோதிடம்

23 mins ago

ஜோதிடம்

36 mins ago

வாழ்வியல்

41 mins ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

57 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்