எல்லை சோதனைச்சாவடியில் சேலம் மதுவிலக்கு எஸ்பி ஆய்வு :

By செய்திப்பிரிவு

தமிழக மாநில எல்லையில் ஓசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் சேலம் மதுவிலக்கு காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

தமிழகத்தில் கரோனா எதிரொலியாக ஊரடங்கு கால கட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்குள் ரூ.40 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டுள்ளது. இவை அனைத்தும் காய்கறி மற்றும் பழங்களை ஏற்றி வரும் வாகனங் களிலும் மற்றும் கார், இருசக்கர வாகனங்கள் மூலமாகவும் கடத்தி வரப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து அத்தகைய வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் மூலமாக ரூ.40 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 40 கார்கள் மற்றும் 80 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். அப்போது மதுவிலக்கு டிஎஸ்பி சங்கர் உடனிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

30 mins ago

விளையாட்டு

21 mins ago

தமிழகம்

45 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்