கரோனா நோயாளிகளுக்காக : 3 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் :

By செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கரோனா நோயாளிகள் பயன்பாட்டுக் காக தன்னார்வ அமைப்புகள் மூலம் 3 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் மற்றும் கரோனா தடுப்பு உபகரணங்கள் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் வழங்கப்பட்டது.

வேலூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் வேலூர் கோவிட் கேர் என்ற தன்னார்வ அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த குழுவின் மூலம் பொது மக்களுக்கு முகக்கவசம், உணவு பொட்டலங்கள் வழங்குவதோடு, வருவாய் இல்லாமல் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு மளிகை பொருட்களையும் வழங்கி வருகின்றனர். இந்த அமைப்பின் உதவியுடன் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் தமிழ்மாறன் கரோனா நோயாளிகள் பயன்பாட்டுக்காக ரூ.2 லட்சம் மதிப்பிலான இரண்டு ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளை பெற்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வசம் நேற்று வழங்கினார்.

அதேபோல், இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட கிளை சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பில் ஒரு ஆக்சிஜன் செறிவூட்டி மற்றும் கரோனா தடுப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வசம் நேற்று வழங்கப்பட்டது. அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் மணிவண்ணன், செஞ்சிலுவை சங்க மாவட்ட செயலாளர் மாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்