கோயில் கும்பாபிஷேக பணிகள் குறித்து ஆலோசனை :

By செய்திப்பிரிவு

காரைக்கால் கைலாசநாத சுவாமி, நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானத்துக்கு சொந்தமான அண்ணாமலை ஈஸ்வரர், பொய்யாத மூர்த்தி விநாயகர் ஆகிய கோயில்களுக்கான கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், கரோனா ஊரடங்கு சூழலால் திருப்பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்வு, அரசின் நிதியுதவி கிடைக்காதது, திருப்பணிக் குழுவுக்கு இன்னும் அரசு அங்கீகாரம் வழங்கப்படாமல் இருப்பது உள்ளிட்டவை குறித்த ஆலோசனைக் கூட்டம், காரைக்கால் தெற்கு தொகுதி எம்எல்ஏ ஏ.எம்.எச்.நாஜிம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில், தேவஸ்தான அறங் காவல் வாரியத் தலைவர் ஆர்.ஏ.ஆர்.கேசவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர், எம்எல்ஏ ஏ.எம்.எச்.நாஜிம் கூறியது:

இந்த 2 கோயில்களுக்கு கும்பாபிஷேக பணிகளை முடிப்பது தொடர்பாக, புதுச் சேரி முதல்வரை சந்தித்து அரசின் நிதியுதவியை பெறுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்