செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் - கிராமப்புற நூலகங்களை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் : பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

காஞ்சி, செங்கை மாவட்ட கிராமங்களில் அனைத்து நூலகங்களையும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த2006–ம் ஆண்டு, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல கிராமங்களில் நூலகங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. இந்த நூலகங்களால் கிராமப்புற மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், போட்டித்தேர்வுக்கு தயாராகி வருபவர்கள்என பல்வேறு தரப்பினர் பயனடைந்து வந்தனர். போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களும் அதிகஅளவில் இடம் பெற்றுள்ளதால், கிராமப்பகுதி இளைஞர்கள் எளிதாக பயனடையும் வகையில் இவைஅமைந்தன. படித்த, மூத்த வயதுகொண்ட ஒருவரை ரூ.1,500 மாத சம்பளத்துக்கு நியமித்து நூலகங்கள் பாரமரிக்கப்பட்டு வந்தன.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில், 633 ஊராட்சிகளிலும் நூலகங்கள் தொடங்கப்பட்டு, தற்போது அவற்றில் 25 சதவீதம் மட்டுமே இயங்கி வருகின்றன. புதிய புத்தகங்கள் ஒதுக்கீடு செய்யாதது, சம்பளம் வழங்குவதில் இழுபறி என தொடர் பிரச்சினைகள் ஏற்பட்டன. தற்போது, இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட பெரும்பாலான நூலகங்கள், செயல்பாடு இல்லாமல் முடங்கியுள்ளன. சில நூலக கட்டடங்கள் பராமரிப்பின்றி, எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றன.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “கடந்த 2006-ல் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள, 12,660ஊராட்சிகளில் தலா ரூ.3.25 லட்சம்செலவில் நூலக கட்டிடங்கள் கட்டப்பட்டன. அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்கள் தற்போது, பயன்பாடு இல்லாமல், சமூக விரோதிகள் கூடாரமாக மாறியுள்ளன. நூலக பராமரிப்பாளர்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்பட்டது. பல ஊராட்சிகளில் இந்தத்தொகை முறையாக வழங்கப்படாததால் யாரும் பராமரிப்புசெய்ய முன்வரவில்லை. ஆனால்,மாதா மாதம் அந்த தொகைவழங்கப்படுவதாக ஊராட்சிகளில்கணக்கு காட்டப்படுகிறது. குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இது அதிகமாக நடைபெறுகிறது. எனவே, தமிழகஅரசு, கிராமப்புறங்களில் உள்ள நூலகங்களை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

உலகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்