குன்னூர் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் மையம் திறப்பு :

By செய்திப்பிரிவு

குன்னூர் அரசு லாலி மருத்துவ மனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டயாலிசிஸ் மையம் திறக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டயாலிசிஸ் மையத்தை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டம், குன்னூர் அரசு மருத்துவமனையில் தன்னார்வலர்களால் ரூ.70 லட்சம் மதிப்பில் டயாலிசிஸ் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் டயாலிசிஸ் செய்வதற்கு ஏதுவாக 6 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பாக குன்னூர் பகுதியைச் சேர்ந்த டயாலிசிஸ் நோயாளிகள் 24 பேர், வாரத்தில் 2 முதல் 3 முறை கோவை அல்லது உதகைக்குசென்று சிகிச்சை பெற்று வந்தனர்.இதனை கருத்தில் கொண்டு, டயாலிசிஸ் பிரிவினை குன்னூர்அரசு மருத்துவமனையில் தன்னார்வலர்கள் ஏற்படுத்தித்தந்துள்ளனர். இவ்வாறு ஆட்சியர் கூறினார். இந்நிகழ்வில், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் பழனிசாமி உட்பட பல்வேறு தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

3 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

உலகம்

5 hours ago

மேலும்