ரேஷன் கடைகளில் மளிகை பொருள் தொகுப்பு பெற - வீடுகளுக்கு சென்று டோக்கன் விநியோகம் :

By செய்திப்பிரிவு

ரேஷன் கடைகளில் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை பெற வீடுகளுக்கு சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.

கரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் ரேஷன் கார்டுதாரர் களுக்கு ரேஷன் கடைகள் மூலம் கோதுமை மாவு, சர்க்கரை, ரவை உள்ளிட்ட 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, இத்தொகுப்பை பெற வீடுகளுக்கு சென்று ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக சேலம் மாவட்ட வழங்கல் துறை பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் 10 லட்சத்து 30 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் 1,571 ரேஷன்கடைகள் மூலமாக பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அரசு வழங்கும் மளிகை பொருள் தொகுப்பை மக்கள் நெரிசலின்றி பெற்றுச் செல்லும் வகையில், ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கி வருகிறோம்.

டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மக்கள் சென்று தொகுப்பை பெற்று கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஈரோட்டில் டோக்கன் விநியோகம்

ஈரோடு மாவட்டத்தில் 1152 ரேஷன் கடைகள் மூலம் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கரோனா நிவாரணத் தொகை ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்ட நிவாரணத் தொகை ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகைப்பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இப்பொருட்களைப் பெறுவதற்காக, ரேஷன்கடை பணி யாளர்கள் வீடு, வீடாகச் சென்று டோக்கன் விநியோகித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்