பழங்குடியினர் வசிக்கும் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்த வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

உதகை: நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லாததால், தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களும், பழங்குடி மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏதுவாக, அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் நீலகிரி மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:

நீலகிரி மாவட்டத்தில் கிராமப் பகுதிகளில் கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், கிராமங்களில் உள்ள சமுதாயக்கூடங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் பள்ளிக் கூடங்களில் தனிமைப்படுத்துதல் மையங்களை கூடுதலாக ஏற்படுத்த வேண்டும். கிராமப்பகுதிகளில் பரிசோதனைகளை அதிகரிக்கவும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பாடு இல்லாமல் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில், தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களும், பழங்குடி மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏதுவாக அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே தடுப்பூசி முகாம்கள் நடத்த வேண்டும். தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் இருப்போருக்கும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கும் உணவு மற்றும் இதர உதவிகளை செய்வதற்கு ஏற்ற வகையில் அதிக அளவிலான தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

16 mins ago

சுற்றுச்சூழல்

22 mins ago

இந்தியா

53 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்