பொதுமுடக்க காலத்தில் - மருத்துவ உதவிகளுக்கு காவல் துறையை அணுகலாம் : காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி தகவல்

By செய்திப்பிரிவு

பொதுமுடக்க காலத்தில் மருத்துவ உதவி உள்ளிட்ட உதவிகளுக்கு அணுகலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கட்டுப்பாட்டு அறைகளையும் அமைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையின் விவரம்:

தமிழக அரசு கரோனா 2-ம் அலை பரவலைத் தடுக்கும் பொருட்டு முதல் ஒரு வாரத்துக்குதளர்வுகளற்ற முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது.

வீட்டுக்கே சென்று உதவி

இந்தச் சமயத்தில் வயது முதிர்ந்த மூத்த குடிமக்களுக்கு மருத்துவ உதவிகளோ வேறு ஏதேனும் உதவிகளோ தேவைப்பட்டால் காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.

அவர்கள் இருக்கும் பகுதிக்கு தொடர்புடைய காவல்நிலையத்தில் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள காவலர்கள் மூலம் அவர்களது வீட்டுக்கே சென்று தேவையான உதவிகள் செய்யப்படும்.

பொதுமக்கள் ஊரடங்கின்போது முகக்கவசம், தனி மனித இடைவெளியைக் கடைபிடித்து வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றார்.

கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்: 044-27239200, 044-27236111.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்