தனியார் ஆலையை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ளது நாகராஜ கண்டிகை கிராமம். இங்கு, இரும்பு தாது மூலப் பொருட்களை உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலையிலிருந்து நாள்தோறும் வெளியேறும் நச்சு கலந்தபுகை வெளியேறுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது; நாகராஜகண்டிகை கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலோர் பல்வேறு பாதிப்புகளால் அவதியுறுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நாகராஜகண்டிகை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர், நேற்று சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை முற்றுகையிட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தும் இந்த தனியார் தொழிற்சாலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சம்பவ இடம் வந்தஆரம்பாக்கம் போலீஸார், ‘இந்த பிரச்சினை தொடர்பாக, சம்பந்தப்பட்டஅதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசென்று, விரைவில் உரிய தீர்வு காணப்படும்’ என உறுதியளித்தனர்.

ஆகவே, சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் அணிந்தும் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நடத்திய தங்களின் ஆர்ப்பாட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

6 hours ago

மேலும்