நீதிமன்ற வளாகங்களை - கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றலாம் : தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

கரோனா பாதிப்பால் நீதித் துறை யில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க உடனடியாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் வழக்கறி ஞர்கள் மற்றும் நீதித்துறை ஊழியர் களுக்காக தனிமைப் படுத்தும் கரோனா வார்டுகளை அமைக் கவும், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளை அமைக் கவும் அரசுக்கு உத்தரவிட வேண் டும்.

இதற்காக பார் கவுன்சிலும், வழக்கறிஞர்கள் சங்கங்களும் தேவையான ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் கரோனா தடுப்பு தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைய சட்டக்கல்லூரி வளாகம் உள்ளிட்ட தமிழகம், புதுச்சேரி யில் உள்ள நீதிமன்ற வளாகங் களை கரோனா சிகிச்சை மையங்களாகவோ அல்லது தடுப்பூசி மையங்களாகவோ மாற்றி தமிழக மற்றும் புதுச்சேரி அரசுகள் பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என அறிவுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்