‘திருப்பூர் மாவட்டத்தில் 40 சதவீதம் பேருக்கு கரோனா முதல்கட்ட உதவித்தொகை விநியோகம்' :

By செய்திப்பிரிவு

உடுமலை: திருப்பூர் மாநகரம், தாராபுரம், காங்கயம், பல்லடம், அவிநாசி, உடுமலை, மடத்துக்குளம் உட்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலமாக, கரோனா நிவாரண உதவித்தொகை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. நியாயவிலைக் கடை ஊழியர்களால் பயனாளிகளுக்கு வீடு, வீடாக டோக்கன் விநியோகிக்கும் பணி நிறைவடைந்த நிலையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அரசின் நிவாரணத் தொகையை பயனாளிகள் பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணகுமார் கூறும்போது, திருப்பூர் மாவட்டத்திலுள்ள 1,135 நியாயவிலைக் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணத் தொகை விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை 7,51,045. இதுவரை 3,00,224 (40 சதவீதம்) குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை விநியோகிக்கப்பட்டுவிட்டது. எஞ்சிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் விரைவில் விநியோகிக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

9 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்