புலிகள் கணக்கெடுப்பு நிறைவு :

By செய்திப்பிரிவு

உடுமலை மற்றும் அமராவதி வனப்பகுதிகளில் கடந்த 8-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற்ற கோடை கால புலிகள் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, "திருப்பூர் வனக் கோட்டத்தில் உடுமலை, அமராவதி, கொழுமம் உட்பட 34 சுற்றுகளில் 54 நேர் கோட்டுப்பாதை அடிப்படையில் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதில் தாவர உண்ணிகள், மாமிச உண்ணிகளின் தடயங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. 14-ம் தேதிநடைபெற்ற கணக்கெடுப்பின்போது ஏழுமலையான் கோயில் சரக பகுதியில் காட்டு மாடுகள், செந்நாய்கள், யானைகள் ஆகியவற்றை நேரடியாக காண நேரிட்டது. உதவி வனப் பாதுகாவலர் க.கணேஷ்ராம் மேற்பார்வையில் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

22 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

37 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மாவட்டங்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்