சிங்கப்பூரிலிருந்து வந்த 244 சிலிண்டர்களில் - ஆக்சிஜன் நிரப்பும் பணி விரைவில் தொடங்கும் : சிப்காட் அதிகாரிகள் தகவல்

By செய்திப்பிரிவு

சிங்கப்பூரில் இருந்து கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டைக்கு 244 காலி சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் ஆக்சிஜன் நிரப்பும் பணி விரைவில் தொடங்கும் என்று சிப்காட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை சேமிக்க காலி சிலிண்டர்கள், காலி கன்டெய்னர்கள் தேவைப்பட்டன. இதையடுத்து, சிங்கப்பூர் அரசிடம் காலி சிலிண்டர்கள், காலி கன்டெய்னர்களை தமிழகஅரசு கேட்டது.

பின்னர், சிங்கப்பூரிலிருந்து இந்திய விமானப் படை விமானங்கள் மூலம் கடந்த சில நாட்களாக காலி சிலிண்டர்கள், கன்டெய்னர்கள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டன.

இவ்வாறு சிங்கப்பூரில் இருந்துசென்னைக்கு கொண்டு வரப்பட்ட 244 காலி சிலிண்டர்கள் லாரிகள் மூலம் நேற்று முன்தினம் இரவுகும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டைக்கு கொண்டுவரப்பட்டன. சிப்காட் தொழிற்பேட்டையில் தற்போது மருத்துவ தேவைகளுக்கான ஆக்சிஜன் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 4 நிறுவனங்கள் மூலம், அந்த காலி சிலிண்டர்களில் ஆக்சிஜன் நிரப்புவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக சிப்காட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கல்வி

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

தமிழகம்

10 hours ago

சுற்றுலா

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

மேலும்