புதுச்சேரியில் ஆயுஷ் மருத்துவமனை திறப்பு :

By செய்திப்பிரிவு

புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரியில், 50 படுக்கைகளுடன் கரோனாசிகிச்சைக்கான ஆயுஷ் மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு இந்திய மருத்துவ முறையான சித்த மருத்துவம், ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதியில் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.

இந்த மருத்துவமனையை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று திறந்து வைத்து, பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர், “கரோனாவைத் தடுப்பதில் தடுப்பூசிதான் மிகப்பெரிய ஆயுதம். மத்திய அரசு சரியான நேரத்தில் தடுப்பூசி கொடுத்தது. ஆனால் மக்களிடம் இருந்த தயக்கம் தடுப்பூசி திட்டத்தை தாமதப்படுத்தி விட்டது. மறுபடியும் தடுப்பூசி திருவிழா நேற்று தொடங்கப்பட்டு 60 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

மத்திய ஆயுஷ் மருந்தகம் சில இயற்கை மருந்துகள் கரோனாவுக்கு நல்லபலனை தருவதாக அறிவித்துள்ளது. அப்படிப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் இங்குகரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

4 hours ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

46 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்