நிலக்கோட்டையில் சந்தை திடீர் இடமாற்றத்தை கண்டித்து - காய்கறிகளை சாலையில் கொட்டி போராட்டம் : விருதுநகரிலும் வியாபாரிகள் மறியல்

By செய்திப்பிரிவு

நிலக்கோட்டையில் காய்கறி சந்தையை திடீரென இடமாற்றம் செய்ததைக் கண்டித்து வியாபாரிகள் காய்கறிகளை சாலையில் கொட்டிப் போராட்டம் நடத்தினர்.

நிலக்கோட்டையில் பஸ் நிலையம் அருகே தினசரி காய்கறி சந்தை செயல்படுகிறது. இதை பேரூராட்சி நிர்வாகம் நேற்று திடீரென மூடியது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக காய்கறி சந்தையை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்துக்கு மாற்றியது. அடிப்படை வசதிகள் செய்துதராமல் இடமாற்றம் செய்ததைக் கண்டித்து காய்கறிகளை வியாபாரிகள் சாலையில் கொட்டிப் போராட்டம் நடத்தினர்.

இதனால் காய்கறிகளை வாங்க வந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். தினசரி சந்தை நடத்த உரிய வசதிகள்செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என வியாபாரிகள் கேட்டுக் கொண்டனர்.

விருதுநகர்

விருதுநகர் பஜார் காய்கறி மார்க்கெட்டில் 200-க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகள் உள்ளன. கரோனா ஊரடங்கால் 12 மணி வரை செயல்படும் இக்கடைகளுக்கு காய்கறி, மளிகைப் பொருட்கள் வாங்க ஏராளமான மக்கள் வருகின்றனர். பலர் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளி இன்றி வருவதால் தொற்று அதிகரிக்கும் சூழல் காணப்பட்டது.

இதையடுத்து கடந்த ஆண்டைப்போல காய்கறி மார்க்கெட்டை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி மைதானம், உழவர் சந்தை, அல்லம்பட்டி முக்கு அருகே உள்ள மாநகராட்சி திடல் ஆகிய இடங்களுக்கு மாற்ற அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து பஜாரில் நேற்று காலை மறியல் செய்தனர். அவர்களிடம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரி பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து வியா பாரிகள் நடத்திய கூட்டத்தில், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்யவும், பஜாரில் வெங்காய மொத்த வியாபாரம் செய்யவும், சில்லரை வியாபாரம் செய்யக் கூடாது என்றும், பஜாரில் பழ வியாபாரம் செய்யக்கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

இந்தியா

21 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

53 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்