இலங்கைக்கு பொருட்கள் கடத்தல் அதிகரிப்பு - 25 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல் :

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக இலங்கைக்கு கஞ்சா, விரலி மஞ்சள், பீடி இலை, ஏலக்காய், மஞ்சள் தூள், மல்லி விதைகள், வெங்காயம் விதைகள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. இலங்கையில் அதிக விலை கிடைப்பதால், இந்தியாவில் இருந்து இப்பொருட்களை சிலர் கடத்துகின்றனர்.

இந்திய கடற்படை, கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு குழும போலீஸார், சுங்கத் துறையினர், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர், உள்ளூர் போலீஸார் என, இத்தனை பேரையும் தாண்டி கடத்தல் நடைபெறுகிறது.

தற்போது கரோனா பரவுவதால், இந்தியாவில் இருந்து வரும் கடத்தல்காரர்களை இலங்கைகடற்படையினர் மடக்கி பிடித்தாலும், அவர்களை கைது செய்து தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்வதில்லை. கடத்தல் பொருட்களை மட்டும் பறிமுதல் செய்துவிட்டு, எச்சரித்து திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

இதனால் கடந்த சில வாரங்களாக தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழக கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு பொருட்களை கடத்திச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 2 வாரங்களில் மட்டும் இலங்கை கடற்படையினரிடம் சுமார் 25 பேர் பிடிபட்டு, திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா, உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ் மற்றும் போலீஸார் நேற்று அதிகாலை கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர். திரேஸ்புரம் கடற்கரையில் நின்ற நாட்டுப்படலில் சோதனை நடத்தினர். படகில் ஒரு மூட்டையில் 25 கிலோ வெள்ளிக் கொலுசுகள் மறைத்து வைக்கப் பட்டிருந்தன.

இது தொடர்பாக தூத்துக்குடி இனிகோ நகரைச் சேர்ந்த பட்டு என்ற பட்டுராஜன் (38) என்பவரைபோலீஸார் கைது செய்தனர். இலங்கைக்கு கடத்த கொலுசுகளை பதுக்கி வைத்திரு ந்தது விசாரணையில் தெரியவந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

23 mins ago

விளையாட்டு

45 mins ago

தமிழகம்

53 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்