தெற்கு ராஜன் வாய்க்கால் கரைகளில் பாதை அமைத்து தர கோரிக்கை :

By செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் உள்ள பிரதான பாசன வாய்க்காலான தெற்கு ராஜன் வாய்க்காலில் இருந்து நூற்றுக்கணக்கான கிளை வாய்க்கால்கள் பிரிந்து செல்கின்றன.

இந்த வாய்க்காலில் உள்ள சேதமடைந்த மதகுகளை அகற்றிவிட்டு, புதிய மதகுகளை அமைக்கும் பணியும், வாய்க்காலின் உள்பகுதியில் இருபுறங்களிலும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும், தெற்கு ராஜன் வாய்க்காலில் பொக்லைன் உதவியுடன் தூர் வாரப்பட்டு, இரு கரைகளிலும் மண் கொட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று அங்கு திரண்ட மேலவல்லம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், தெற்கு ராஜன் வாய்க்காலில் தூர் வாரப்படும் மண்ணை எடுத்து, இரண்டு கரைகளிலும் நிரப்பி போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் பாதை அமைத்துத் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால், தூர் வாரும் பணியில் ஈடுபட்டவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர், பொதுப்பணித் துறை அதிகாரிகள், வாய்க்கால் கரைகளில் பாதை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து, இளைஞர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்