அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை இல்லை : கிருஷ்ணகிரி ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் பற்றாக்குறை இல்லை என மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக பொதுமக்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் அதிகரித்தல் மற்றும் ஆக்சிஜன் வசதிகள் அதிகரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் கரோனா நோய் தொற்று மற்றும் அறிகுறி கண்டறியப்பட்டவர்கள் என மொத்தம் 389 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது 245 காலி படுக்கைகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 539 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, 259 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் பற்றாக்குறை இல்லை. 504 படுக்கைகள் காலியாக உள்ளன.

மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 501 ஆக்சிஜன் உருளைகள், 19 ஆயிரம் லிட்டர் திரவ பிராணவாயு கொள்ளளவு கலன் பயன்பாட்டில் உள்ளன. எனவே, பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து தேவையான மற்றும் இன்றியமையாத பணிகளுக்கு மட்டும் வெளியே சென்று பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

29 mins ago

உலகம்

50 mins ago

வாழ்வியல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

மேலும்